/ வாழ்க்கை வரலாறு / ஏழைப் பங்காளன் கர்மவீரர் காமராசர்

₹ 90

காமராஜரின் அரசியலும், ஆட்சியும் இன்று வரை போற்றப்படுவதற்கு காரணம், அவரின் எளிமையும், நேர்மையும். இறவாப்புகழ் பெற்ற அவரின் வரலாற்றை, புதுக்கவிதை வடிவில் தொடுத்து உள்ள நுால்.கட்டுரை, ஆய்வுக்கோர்வை, மேடைப்பேச்சு என பல களங்களில் காமராஜரின் சிறப்புகள் அறியப்பட்ட போதிலும், சிறு கவிதைகள் வழியே உணர்வது சற்று சுவாரசியமாகவும் சுவையாகவும் உள்ளது.‘நீ குறிஞ்சிப்பூ தான் தேர்தலுக்கு மட்டுமே அறுவடை உன் நாமம்...’ என்கிறது.‘நீ தந்த நேர்மை அமுதசுரபி பொய்யர் அரசியலில் திருவோடாய் யாசிக்கிறது...’ போன்ற ஆழமான வரிகள், புத்தகத்தில் ஆங்காங்கே பளிச்சிடுகின்றன.– சையத் அலி


புதிய வீடியோ