/ வரலாறு / எல்கின் சாலையிலிருந்து தைவான் வரை

₹ 150

இந்திய தேசிய ராணுவத்தை அமைத்து, சுதந்திர போராட்டத்திற்கு உத்வேகம் கொடுத்த நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் வரலாற்றை கூறும் நுால். சுவாமி விவேகானந்தர் மீது ஏற்பட்ட ஈர்ப்பு பற்றி கூறப்பட்டுள்ளது. நாட்டை ஏளனப்படுத்திய பேராசிரியருக்கு எதிர்ப்பு தெரிவித்த பாங்கு உரைக்கப்பட்டுள்ளது. ஐ.சி.எஸ்., தேர்ச்சி பெற்று ஆங்கிலேய அரசில் பதவி வகிக்க விரும்பாமல் திரும்பியதை தெரிவிக்கிறது. சென்னை ராயப்பேட்டையில் தங்கியதை பகிர்கிறது. நேதாஜி மரண சர்ச்சையுடன் ஆவணங்கள் அழிக்கப் பட்டதை விவரிக்கிறது. இயற்கை மரணம் அடைந்ததாக வெளியான அறிக்கை பற்றி கூறப்பட்டுள்ளது. ஜான்சிராணி படையை உருவாக்கும் தேவை பற்றி கூறுகிறது. ஆதாரங்கள் அடிப்படையிலான நுால். – டி.எஸ்.ராயன்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை