/ இலக்கியம் / கங்கை நதிப்புறத்து...
கங்கை நதிப்புறத்து...
நவீன ஹிந்தி இலக்கியத்தை உருவாக்கிய எழுத்தாளர்கள் குறித்து அறிமுகம் செய்யும் நுால். ஹிந்தி இலக்கியத்தின் பொற்காலம் முதல் தற்காலம் வரை முக்கிய படைப்பாளிகள் விபரம், அவர்களின் இலக்கிய பங்களிப்பு பற்றி எடுத்து கூறப்பட்டுள்ளது. ஹிந்தி மொழியில் உள்ள இலக்கிய வளத்தையும், படைப்புகளின் முக்கியத்துவத்தையும் அறிய தருகிறது.ஹிந்தி இலக்கிய படைப்பாளிகளில், 52 பேர்பற்றிய சுவாரசியமான தகவல்கள் தொகுத்து தரப்பட்டுள்ளன. ஒவ்வொரு எழுத்தாளரின் குடும்ப பின்னணியுடன் அமைந்துள்ளது. பிரபல நடிகர் அமிதாப் பச்சனின் தந்தையை, நவீன கவிஞர் என அறிமுகப்படுத்துகிறது. பயண இலக்கியத்தின் தந்தை என போற்றப்படும் ராகுல சாங்கிருத்யாயன் குறித்தும் சுவாரசியமிக்க தகவல்கள் உடைய நுால்.– ராம்




