/ பொது / கலைச்சொல் பேரகராதி தொகுதி -1

₹ 400

தமிழ் இணையப் பல்கலைக்கழகம், நான்காவது தளம், எல்நெட் மென்பொருள் நகரம், C.P.T. சாலை, தரமணி, சென்னை-600113. 91?44?22541012/1013அனைத்துத் துறைகளிலும் உயர்கல்வி மொழியாகத் தமிழ் விளங்க உறுதுணையான தேவைகளுள் முதன்மையானவை தமிழ்வழிப் பாட நூல்களும், நூல்கள் எழுதுதற்கு உதவியாய்த் தேவைப்படும் கலைச்சொற்களும் எனலாம். இதை உணர்ந்தே தமிழக அரசு 2000-ஆம் ஆண்டில் கலைச் சொல்லாக்கத் திட்டத்தினை விரிவாக வகுத்து, கலைச்சொற்களை உருவாக்கும் பணியைப் பதினான்கு பல்கலைக்கழகங்களுக்குப் பகிர்ந்தளித்தது. பல்கலைக்கழகங்கள் திரட்டித் தந்த கலைச்சொற்களைச் சீராய்வு செய்து, பதிப்பித்து, பதினான்கு தொகுதிகளாய் வெளியிடத் திட்டமிட்டு, வெளியிட்டு வருகிறது தமிழ் இணையப் பல்கலைக்கழகம். தற்போது 6 தொகுதிகள் வெளியிடப்பட்டு விற்பனைக்குள்ளன. பல்வேறு துறைகளிலும் உயர் கல்வியறிவைத் தமிழ்வழி வெளிப்படுத்தும் பணிகளை மேற்கொள்ளும் ஆசிரியர்கள், நூலாசிரியர்கள், கட்டுரையாளர்கள் போன்ற அனைவரின் முயற்சிகளுக்கும் இத்தொகுதி துணைநிற்கும். இத்தொகுப்புகள் பல்கலைக்கழக, கல்லூரி, கல்வி நிறுவன நூலகங்களில் இடம்பெறுதல் இன்றியமையாதது.


வாசகர்கள் கருத்துகள் (3)

Venkatesan
நவ 29, 2025 09:27 AM

Tnpsc


Venkatesan
நவ 29, 2025 09:28 AM

மிகவும் நல்ல நூல்


Archana
டிச 14, 2025 04:54 PM

பிடிஎ venum


சமீபத்திய செய்தி