/ வர்த்தகம் / தங்கம் வெள்ளி மற்றும் வைரத்திற்கான ஜிஎஸ்டி
தங்கம் வெள்ளி மற்றும் வைரத்திற்கான ஜிஎஸ்டி
ஜி .எஸ்.டி., வரி விதிப்பு தொடர்பான சந்தேகங்களை தீர்த்து வைக்கும் கேள்வி – பதிலாய் அமைந்த புத்தகம். தங்க நகைக்கும் ஜி.எஸ்.டி., வரி உண்டு என தெரிவிக்கிறது. எத்தனை சதவீதம் வரி விதிக்கப் படுகிறது என்பதற்கும் தக்க பதில் கூறி தெளிவு படுத்துகிறது. பழைய தங்க நகைகளை தனிநபர் விற்றால், அதற்கு வரி கிடையாது; வியாபாரி விற்பதாக இருந்தால் வரி செலுத்த வேண்டும் என்கிறது. வெள்ளிக்கும் வரி விதிப்பதை கூறுகிறது. வைரத்தை நகையாக விற்றால் வரி உண்டு என்கிறது. வீடு வாடகைக்கு விடும்போது, விதிக்கப்படும் வரி விகிதத்தையும் தெரிவிக்கிறது. வருமான வரி தொடர்பான சந்தேகங்களையும் தீர்த்து வைக்கும் நுால். – முகிலை ராசபாண்டியன்




