குரு சமர்ப்பணம் (Pearls from the ocean of wisdom)
பக்கம்: 240 காஞ்சி பரமாச்சாரியார் மகா பெரியவரின், அருள்மொழிகளான பொன்மொழிகளைத் தொகுத்து, அற்புதமான நூலாக வெளியிட்டுள்ளனர். நூலின் தொடக்கத்தில் ஆதிசங்கரர் முதல், விஜயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் வரை சங்கராச்சாரியார்கள் எழுபதின்மர் படங்களும், குறிப்புகளும் அழகாக அச்சிடப் பெற்றுள்ளன.மகா பெரியவர் படங்களை இடப்பக்கத்தில் அச்சிட்டு, வலப் பக்கத்தில் அவர்கள் அருளிய ஞான மொழிகளை - முத்துக் கருத்துகளை தந்த முறை மிக நன்று."புண்ணியங்களால் நன்மை உண்டாகும்,பாவங்களால் தீமை உண்டாகும்."உண்மையை மட்டும் பேசுங்கள் போன்ற கருத்துக்கள் வாழ்க்கையில் உணர்ந்து பின்பற்ற வேண்டிய நன்முத்துக்கள்.""மாணவர்களின் முன்னேற்றத்திற்கும், பன்முக வளர்ச்சிக்கும், ஆசிரியர்கள் பணியாற்ற வேண்டும். தொண்டுள்ளமும் அன்பும் கொண்டு, ஈடுபாட்டுடன் பணியாற்ற வேண்டும் என்ற கருத்தினை ஆசிரியர்கள் பின்பற்றினால், நாட்டிற்கே நன்மை. (பக்.111). கடவுளருளால் நெல் விளைகிறது. விஞ்ஞானிகள் ஆராய்ச்சி செய்யலாம். செயற்கையாக ஓர் அரிசியையும் உற்பத்தி செய்ய முடியாதே (பக்.171) என்பது எவ்வளவு உண்மை. இந்த நூல் நவரத்தின பேழை. எளிய நடையில் எல்லாருக்கும் புரியுமாறு உள்ள இந்த ஆங்கில நூல், படித்துப் பாதுகாக்க வேண்டிய சிறந்த நூல்.