/ ஆன்மிகம் / ஞானப்பிரான் தந்த ஞானப்பிரான்
ஞானப்பிரான் தந்த ஞானப்பிரான்
ஸ்ரீமுஷ்ணம் பெரியாண்டவர் சரித்திரத்தில் பல்வேறு தகவல்களை தரும் நுால். குருபரம்பரா பிரபாவம், ஸ்ரீமதாண்டவன் ஆசிரம வரலாறு, ஆசாரிய ராமாமிருதம், வைணவன் குரல், மங்களமாலிகா, ஆசார்ய வைபவம், பிரபந்த ரக்ஷை, கண்ணி நுண்சிறுத்தாம்பு, ஸ்ரீரங்கநாத பாதுகாவின் இதழ்கள் எனப் பல தரவுகளின் அடிப்படைகளை கொண்டமைகிறது.‘சக்ஷ்மீநாத ஸமாரம்பாம் நாத யாமுன மத்யமாம் அஸ்மத் ஆசார்ய பர்யந்தாம் வந்தே குருபரம்பராம்’ என குருபரம்பரையை அறிமுகம் செய்கிறது. சாஸ்திரங்களின் உண்மைப்பொருளை பெரியவர்களிடம் இருந்து திருவடி பணிந்து கற்றுக் கொள்வதுடன், நல்ல அறங்கள் வழி வாழ்ந்து காட்டுவதே சிறப்பு என்பன போன்றவற்றை சுலோகங்களின் வழி விளக்குகிறது.– முனைவர் இரா.பன்னிருகைவடிவேலன்