/ ஆன்மிகம் / ஞானகர்ம சந்நியாச யோகம்
ஞானகர்ம சந்நியாச யோகம்
கீதா உபதேசம் மேற்கோள்களுடன் விரிவாக விளக்கப்பட்டுள்ள நுால். ஸ்லோகங்களுக்கும் எளிய நடையில் பொருள் கூறப்பட்டிருப்பதோடு, மகாபாரத, புராண நிகழ்வுகள் எடுத்துக்காட்டப்பட்டுள்ளன. எவன், யார் மனதையும் புண்படுத்தாது, இறை சிந்தனையில் ஆழ்ந்திருக்கிறானோ அவனே இறைவனுக்கு உகந்தவன்; இறைவா என்று கூப்பிட்டதும் மகனே என்று கேட்கின்ற தன்மையை பெற்றிருப்பன் இறைவனுக்கு உகந்தவன் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. பகவான் அருளுரைகள் விரிவாக விளக்கப்பட்டுள்ளன. யார் எங்ஙனம் வேண்டுகிறார்களோ அங்ஙனமே சார்ந்து இருக்கிறேன்; பற்றற்ற நிலையிலே சுகமும், ஆனந்தமும், திருப்தியும் உண்டு; ஒன்றைப் பற்றி சுகம் அடைவதை விட, பற்றற்ற நிலையில் சுகம் அடைவதே உத்தமம் என விவரித்துள்ளது. பகவத் கீதையின் சாராம்சத்தைத் தெரிந்து, வாழ்வில் பயன்படுத்த உதவும் நுால்.– புலவர் சு.மதியழகன்