/ கட்டுரைகள் / ஞானத்தின் தலைவாசல்

₹ 280

ரமணோதயம் இதழ்களில் எழுதப்பட்ட கட்டுரைகளின் தொகுப்பு நுால். ஞானசாகரமாய் விளங்கும் பகவான் ரமணரின் போதனைகளை பற்றி கூறப்பட்டுள்ளது. நான் யார், ரமண சந்நிதி முறை, உள்ளது நாற்பது, அக்ஷரமணமாலை, ஞானசார விசார படலம், ஆன்ம போதம் போன்ற மெய்ஞான படைப்பு சாரம், திருவாசகம், தாயுமானவர் பாடல்கள், திருக்குறள் மேற்கோள்களோடு தரப்பட்டுள்ளன. படைத்திருப்பதும், மெய்ஞானம் ஒரு நொடியில் ஏற்படலாம், தன் முனைப்பு இல்லாதபோது மெய்ஞானம் தானே முகிழ்கிறது, நான் யார் என்பதை உள்முகமாக நோக்கினால் கண்டறிவது தான் மெய்யான சத்சங்கம் என ஆன்ம விசாரத்தை நெறிப்படுத்தும் வகையில் உள்ளன. திருமூலரோடு ஒப்பிட்டுள்ள உரைநடைகளும் ஞானச் செறிவோடு அமைந்துள்ளன. அர்த்தமுள்ள நுால். – பின்னலுார் விவேகன்