/ கவிதைகள் / ஞானியின் பச்சைக்கிளி

₹ 100

மனித வாழ்வியல், நாட்டு நடப்புகளை அலசும் ஹைக்கூ கவிதை தொகுப்பு நுால்.‘அழுக்கு இரயிலடியில் தடதடக்கும் புதுப்பாட்டு; இரசிக்கும் காதுகள்’ என பயணியர் குறைவான ரயில் நிலையத்தை நினைவூட்டுகிறது.‘மழை ராத்திரியில் துளித்துளியாய் நனையும் கனவுகள்; விடிந்தால் தேர்வு’ என மழையை ரசிக்கச் சொல்கிறது. ‘இறகுலர்த்தும் கோழிக்குஞ்சு அசைவற்று உறைகிறது; தலைக்கு மேல் பருந்து’ என கோழிக்குஞ்சுகளின் மரண பயத்தை உணர்த்துகிறது.‘எச்சிலெடுக்கும் குழந்தை ஒரு கை துடைக்க; மறு கை மூடும் ரவிக்கை’ என பெண்ணின் கண்ணியத்தை பேசுகிறது. அன்றாடம் சந்திக்கும் நிகழ்வுகளை, கவிதை மொழியில் பேசும் நுால். கவிதை எழுத முயற்சிப்போருக்கு பயன்படும்.– டி.எஸ்.ராயன்


புதிய வீடியோ