/ கட்டுரைகள் / ஹைக்கூ ஒரு கூர்நோக்கு

₹ 110

குறுங்கவிதை வாயிலாக கவிஞர்கள் வெளிப்படுத்தும் சிந்தனையை அலசும் கட்டுரைகளின் தொகுப்பு நுால். பேருந்தின் கூரையில் விழும் புளியம் பூக்களின் அழகை வர்ணிக்கிறது. குழந்தை பெற்றுக்கொள்ளவில்லை என்றால், தலைமுறை அழிந்து விடும் என்ற பயத்துடன் வாடகை தாய் குழந்தை குறித்து அலசுகிறது. மரத்தை வெட்டுவதை மனசாட்சியை உலுக்கி கேட்கிறது. குழந்தைகளை நர்சரி பள்ளியில் சேர்க்கும் அவலத்தை, ‘விளையாட ஏங்கும் பொம்மை’ கவிதை உணர்த்துகிறது. கருவேலம் பூக்களில் தேன் இல்லாததால், பசியோடு வாடும் வண்ணத்து பூச்சி பற்றியும் பேசுகிறது. பெற்றோருக்கும், பிள்ளைகளுக்கும் இடைவெளியை, ‘அனாதை இல்லங்கள்’ கவிதை சுட்டிக்காட்டுகிறது. சமூக பார்வையுள்ள நுால். – டி.எஸ்.ராயன்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை