சர்க்கரை நோயினால் வரும் இருதய செயலிழப்பு, சிறுநீரக செயலிழப்பு
சர்க்கரை வியாதியை மருந்து, மாத்திரைகளால் கட்டுப்படுத்த வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தும் விரிவான நுால். சர்க்கரை நோயாளிகள், மருத்துவ மாணவர்கள், செவிலியர் மற்றும் மருத்துவ களப்பணியாளர் பயன்படத்தக்க வகையில் உள்ளது. இன்சுலின் வகை, அதை பரிந்துரைப்பது, இரவில் இன்சுலின் ஊசி யாருக்கு கொடுக்க வேண்டும் போன்ற விபரங்கள் உள்ளன.சர்க்கரை நோயால் வரும் இதய நோய், சிறுநீரக பாதிப்பு, 20 வயது முதல் 80 வயது வரை சர்க்கரை நோய் உள்ளவர்களை அணுகும் முறை, பேக்கரி உணவுகளால் ஏற்படும் பாதிப்பு பற்றி விளக்கப்பட்டுள்ளது. சர்க்கரை நோய் பாதிப்பு ஏற்படும் போது இதயம், சிறுநீரகம், கண், பாதங்கள் போன்றவற்றை பாதிப்பின்றி பாதுகாப்பது பற்றி விரிவாக குறிப்பிடப்பட்டுளளது. புத்தகத்தில் நோய் அறிகுறி, மாத்திரை மருந்து பற்றி கூறப்பட்டிருந்தாலும், மருத்துவர் பரிந்துரையில் மட்டுமே பயன்படுத்த வேண்டும்.– இளங்கோவன்