/ வாழ்க்கை வரலாறு / உயர் சாதி இந்துப்பெண்
உயர் சாதி இந்துப்பெண்
பெண்கள் நலனுக்காக அர்ப்பணித்த, மராட்டிய பெண் ரமாபாய் வாழ்க்கை வரலாற்று நுால். தந்தைக்கு, 10 வயதில் நடந்த திருமண நிகழ்வால் ஏற்பட்ட திருப்பங்களை கூறுகிறது.தந்தைக்கு இருந்த முற்போக்கு சிந்தனையுடன் வளர்ந்ததை விவரிக்கிறது. பெற்றோர் இறந்தபின், அதே சிந்தனைப்படியே வாழ்க்கை பாதையை அமைத்து பெண் கல்வியை பரப்பியது பற்றிய விபரங்களை தருகிறது. குழந்தை திருமண எதிர்ப்பு, மொழி திறன் வளர்ப்பு, சம்பவங்கள் கூறப்பட்டுள்ளன. பெண் கல்வி, விடுதலை, ஆற்றிய பணிகளை விவரிக்கிறது. சாதி, மதம், சடங்கு கடந்த கல்வி எவ்வளவு முக்கியம் என்பதை பாடமாக்கும் நுால்.– டி.எஸ்.ராயன்