/ வரலாறு / இந்தித் திணிப்பு அன்றும் – இன்றும்
இந்தித் திணிப்பு அன்றும் – இன்றும்
ஹிந்தி மொழி திணிப்பு பற்றிய தகவல்களை தொகுத்து அளித்துள்ள நுால். துவக்கத்தில் தமிழ் மொழியின் சிறப்புகளை பற்றி தனி தலைப்பில் கூறப்பட்டுள்ளது. இந்திய மொழிகளின் வரலாற்றையும், சிறப்புகளையும் எடுத்துரைக்கிறது. கரிபோலி, சமஸ்கிருதம், இந்துஸ்தான் மொழிகளின் கலவையாக ஹிந்தி மொழி உருவாக்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. ஹிந்தி தமிழகத்தில் கற்பிக்கப்பட்டதும், தி.மு.க., எதிர்த்ததும் கூறப்பட்டு உள்ளது. தமிழகத்தில் அடுத்தடுத்து நடந்த மொழி எதிர்ப்பு நிகழ்வுகள் குறித்து பேசப்பட்டுள்ளது. ஹிந்தி எதிர்ப்பில் தமிழக அரசியல் கட்சிகளின் பங்கு விளக்கப்பட்டுள்ளது. கருணாநிதி, எம்.ஜி.ஆர்., பற்றியும் தகவல்களை உள்ளடக்கிய நுால். – முகில்குமரன்