/ கட்டுரைகள் / HISTORY OF JOURNALISTS ORGANISATIONS IN MADRAS
HISTORY OF JOURNALISTS ORGANISATIONS IN MADRAS
ஒரு சிறந்த பத்திரிகையாளர் இப்புத்தகத்தின் ஆசிரியர் ஆவார். ‘தினமலர்’ நாளிதழின் தலைமை நிருபராக நெடுநாள் பணியாற்றிய அவர், பல்வேறு மீடியாக்களில் பணியாற்றிய அனுபவமும் உள்ளவர்.எம்.பில்., பட்டப்படிப்பாக மேற்கொண்ட ஆய்வுகளின் தொகுப்பாக அமைந்த இந்த நுாலில் நிருபர்கள் மன்றம் போன்ற அமைப்புகளில் மட்டும் அல்ல, சட்டசபை நிருபர் என்ற முறையில் பல அனுபவங்கள், அதில் ஏற்பட்ட நெருடல்களை, இதில் உரிய தலைப்புகளில் அவர் தொகுத்திருப்பது சிறப்பாகும்.சமூகப் பணிகளில் நிருபர் என்பவர் ஒரு தனித்துவம் மிக்க சமூக பிரக்ஞையுடன் செயல்படுபவர் என்பதை இதில் இவர் பதிவு செய்திருப்பது சிறப்பாகும்.