/ ஆன்மிகம் / திருமலை திருப்பதி ஸ்ரீ வேங்கடாசலபதி ஸ்தல வரலாறு
திருமலை திருப்பதி ஸ்ரீ வேங்கடாசலபதி ஸ்தல வரலாறு
திருப்பதி ஏழுமலையான் பெருமையை விளக்கும் நுால். துயில் எழுப்ப சுப்ரபாதம் இசைப்பது முதல் இரவு சேவை வரை விளக்குகிறது.திருப்பதிக்கு சென்றவுடன் முதலில் வழிபட வேண்டிய வராக மூர்த்தி வரலாறு கூறப்பட்டுள்ளது. புஷ்கரணியில் நீராடினால் வரும் நன்மைகளை சொல்கிறது. குபேரனிடம் கடன் பெற்ற வரலாறு, வட்டி விபரம் நயம்பட நவில்கிறது. ஸ்ரீனிவாச கல்யாண வைபவத்தை விவரிக்கிறது. ஏழுமலைகளின் பெயர் காரணத்தையும் விளக்கியுள்ளது. சுப்ரபாத பொருள் விளக்கம் தரப்பட்டுள்ளது. பக்தியின் முக்திக்கு வேங்கடேஸ்வர நாமாவளிகள் கூறப்பெற்றுள்ளன. திருவேங்கடமலையின் வரலாற்றை பக்தி வெள்ளத்தோடு தரும் நுால். – பேராசிரியர் ரா.நாராயணன்