/ கட்டுரைகள் / ஊர்க்காவலன் - (பகுதி – 2)
ஊர்க்காவலன் - (பகுதி – 2)
தமிழக காவல் துறையில் கூடுதல் டி.ஜி.பி.,யாக பொறுப்பு வகித்து ஓய்வுபெற்ற அதிகாரி யின் பணி அனுபவங்களின் தொகுப்பு நுால். இரண்டு முதல்வர்கள் மீதான ஊழல் வழக்கு விசாரணையில் பின்னணி தகவல்களையும் உள்ளடக்கியுள்ளது. பரபரப்பான குற்றங்களில் துப்பு துலக்கிய நடைமுறை சுவைபட விவரிக்கப்பட்டுள்ளது. வழக்கு விசாரணைகளில் அரசியல் பிரமுகர்களின் தலையீடுகள், ஆட்சி மாற்றத்தால் சிதைந்த உண்மைகள் பற்றி விரிவாக கூறப்பட்டுள்ளது. அரசியல்வாதிகளின் ஊழல் வழக்குகள், ஆட்சி மாற்றத்தில் உருக்குலைந்து போவதும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. முக்கிய பொறுப்புகள் வகித்தபோது மக்களுக்கு உதவிய மனிதாபிமான செயல்பாடுகளும் கூறப்பட்டுள்ளன. தமிழக வரலாற்றில் ஒரு காலகட்டத்தை படம் பிடிக்கும் விறுவிறுப்பான நுால். – மதி




