/ சிறுவர்கள் பகுதி / மேஜிக் செய்வது எப்படி?

₹ 55

மேஜிக் நிபுணராக கற்று தரும் நுால். இதில், 50 விதமான நிகழ்வுகள் குறித்த தகவல் உள்ளது. தந்திரமும், பேச்சு திறமையும் மேஜிக் நிபுணருக்கு இன்றியமையாத தகுதி என்று கூறுகிறது. பார்வையாளர்களை குழப்புவதில் தான் மேஜிக் வெற்றியே இருக்கும் என்ற உண்மையை உரைக்கிறது. பார்வையாளர்கள் மனதில் ஒருவித படபடப்பையும், எதிர்பார்ப்பையும் உருவாக்குவதில் மேஜிக் நிபுணர்கள் மிகுந்த கவனத்துடன் செயல்படுவது குறித்து விளக்குகிறது. மேஜிக் நிகழ்த்த வாக்கு சாதுரியம், செயல் வேகம் மிக முக்கியம் என்று அறிவுறுத்துகிறது. மேஜிக் நிபுணரின் உடையலங்காரம், கையில் வைத்திருக்கும் மந்திரக்கோல், மேஜை, விரிப்பு, கம்பளம் மற்றும் உபகரணங்களை பயன்படுத்தவும் கற்று தரும் நுால். – டாக்டர் கார்முகிலோன்


முக்கிய வீடியோ