/ வாழ்க்கை வரலாறு / அமெரிக்கர் வில்லியம் சரோயனின் மனிதநேய மாண்பு

₹ 85

அமெரிக்க இலக்கியவாதி வில்லியம் சரோயன் வாழ்க்கை பாதையை கூறும் நுால். உலகப் போரால் நடந்த பேரழிவுகளை, நாடகம் வாயிலாக வெளிப்படுத்தியது பற்றி விபரங்கள் உள்ளன.ஆர்மீனியா நாடு சுதந்திர காற்றை சுவாசிக்கப் போராடியவர். வறுமைக்கு தீர்வு காண முயன்றவர். துன்பம் தொடர்கதை என எழுதி, எதார்த்தத்தை புரிய வைத்தவர். நாடுகளின் ஆக்கிரமிப்பு எண்ணத்தை அடியோடு வெறுத்தவர். கடைநிலை மனிதர்களின் வாழ்க்கையை கண்முன் நிறுத்தியவர்.இவர் இறந்த பின் அஸ்தியின் ஒரு பகுதி, ஆர்மீனியாவிலும், மறுபாதி, அமெரிக்கா, கலிபோர்னியாவிலும் துாவப்பட்டது. அர்த்தமுள்ள வாழ்வின் வரலாற்றை தொகுத்து தரும் நுால்.– டி.எஸ்.ராயன்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை