/ வரலாறு / இடைப்பாடி ஒரு வரலாற்றுக் களஞ்சியம்
இடைப்பாடி ஒரு வரலாற்றுக் களஞ்சியம்
சேலம் மாவட்டத்தில் இடைப்பாடி வரலாற்றை எடுத்துரைக்கும் நுால். கல்வெட்டு, சிற்பங்கள், அரசு ஆவணங்களின் துணையுடன் தெளிவாக எழுதப்பட்டுள்ளது. ஒவ்வொரு செய்தியும் ஆய்வுப்பூர்வமாக உள்ளன.இடைப்பாடி ஊரின் பின்னணியில் உள்ள வரலாறு தெளிவாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவற்றுக்கு உரிய ஆதாரங்கள், அரசு ஆவணங்கள், கோவில் சிற்பங்கள், கல்வெட்டு தகவல்கள் என மிகவும் நுட்பமாக தேடி எடுத்து தெரிவிக்கிறது. தக்க ஆவணங்கள் துணையுடன் தகவல்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.ஒரு ஊரின் இயக்கம், வளர்ச்சி போக்கு தெளிவாக தரப்பட்டுள்ளது. பொது சொத்துக்கள் பற்றியும் குறிப்பிடுகிறது. மன்னர் ஆட்சி விபரங்களுடன், மக்கள் வாழ்க்கை குறித்தும் தெரிவிக்கும் நுால்.– மதி