/ தமிழ்மொழி / இக்காலத் தமிழில் இலக்கணக் கூறுகள்
இக்காலத் தமிழில் இலக்கணக் கூறுகள்
வேற்றுமை உருபு, சாரியை போன்றவை பெயர், வினைச் சொல் சார்ந்து உருபாகவோ, பின்னொட்டாகவோ வரும்போது, சொற்றொடர்களில் ஏற்படும் பொருள் மாற்றத்தை எடுத்துரைக்கும் நுால். இரட்டைக்கிளவி, அடுக்குத்தொடர் மொழி வழக்கில், திருப்புகைச் சொற்களாக இடம்பெற்றுள்ள பாங்கு மேற்கோள்களுடன் தரப்பட்டுள்ளன. காலம் காட்டும் குறியீடுகள், திணை, பால், இடம் காட்டும் விகுதிகள், பிரிநிலை உம்மை, பிரிவில் உம்மை என, இலக்கணக் கூறுகள் வகைப்படுத்தி உரைக்கப்பட்டுள்ளன. ஆனால், ஆனாலும், ஆனபோதிலும், ஆன மட்டும் போன்ற சொற்கள் உணர்த்தும் பொருள் வேறுபாடுகளும் தரப்பட்டுள்ளன. தமிழ் இலக்கண ஆய்வில் ஈடுபடுவோருக்கு பயன்படும் நுால்.– புலவர் சு.மதியழகன்