/ பயண கட்டுரை / இலக்கியச் செல்வர் குமரி அனந்தனின் பயணங்கள்

₹ 100

குமரி அனந்தன் அரசியல் வாழ்வுடன் பயணித்த அனுபவங்கள் நுாலாக வடிக்கப்பட்டுள்ளது. விவசாய குடும்பத்தில் பிறந்த குமரி அனந்தன் சொற்பொழிவை கேட்ட காமராசர், அவரை இளைஞர் காங்கிரஸ் செயலராக்கினார். காமராசரின் வேண்டுகோளை ஏற்று, அரசியல் களம் புகுந்து தமிழ்ப் பேச்சாற்றலால் ஈர்ப்பை ஏற்படுத்தினார். காமராசர் மறைவுக்குப் பின் ஏற்பட்ட அரசியல் மாற்றங்கள், ஜனதாவில் இணைந்தது, குமரி அனந்தன் பார்லிமென்ட் உறுப்பினராக ஆனது, பார்லிமென்டில் தமிழில் கேள்வி கேட்கவும் பதிலைப் பெறவுமான உரிமையைப் பெற்றது.பயிற்சிப் பட்டறை ஏற்படுத்தியது, தமிழக விடுதலைப் போராட்டத் தியாகிகளுக்கு மணிமண்டபம் அமைய வழிகோலியது, நதிகள் இணைப்புக்காக பாதயாத்திரை போன்ற நிகழ்வுகள் பதிவிடப்பட்டுள்ளன. நடிகர்கள் ரஜினி – எம்.ஜி.ஆர்., அரசியல் நகர்வு ஒன்றும் பதிவிடப்பட்டுள்ளது. – புலவர் சு.மதியழகன்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை