/ கட்டுரைகள் / இலக்கியங்கள் காட்டும் தனிமனித ஒழுக்கம்
இலக்கியங்கள் காட்டும் தனிமனித ஒழுக்கம்
சமுதாய ஒழுக்கத்திற்கு அடிப்படையாக விளங்கும் தனிமனித ஒழுக்கம் பற்றிய ஆய்வுக் கட்டுரைகளின் தொகுப்பு நுால். திருக்குறள், திரிகடுகம், சிறுபஞ்சமூலம், கம்பராமாயணம், திருமந்திரம், சிவ வாக்கியர் பாடல்கள், திருவருட்பா, நீதிநெறி விளக்க கருத்துகள் உரைநடையில் தொகுக்கப்பட்டுள்ளன. முனைவர் பட்டம் பெற்றவர்களும், ஆய்வாளர்களும் எழுதியுள்ளனர்.காப்பியங்கள் காட்டும் தனிமனித ஒழுக்கம் பற்றிய கட்டுரையில், தமிழ்க் காப்பியங்களில் சொல்லப்பட்டுள்ள ஒழுக்கச் சிந்தனைகளைத் தெளிவுபடுத்தியுள்ளது. திருப்பாவையில் சொல்லப்பட்டுள்ள தனிமனித ஒழுக்கமும் விளக்கப்பட்டுள்ளது. – முகிலை ராசபாண்டியன்