/ இலக்கியம் / இலக்கியத் திறனாய்வும், படைப்பிலக்கியமும்

₹ 150

பக்கம்: 208, படைப்பாளிக்கும், திறனாய்வாளனுக்கும் இடையே, ஒரு தொடர்பை ஏற்படுத்துவது படைப்பு தான். நூலைப் படைத்தவனைக் காட்டிலும், திறனாய்வாளன் புகழ் பெறும் அளவிற்கு, திறனாய்வு உலகம் வளர்ச்சி பெற்றுள்ளது. இலக்கியம் உணர்வினை வெளிப்படுத்தினால், அதில் அறிவினை செலுத்துவது திறனாய்வு. அறிவுக் கண் கொண்டு, இலக்கியத்தை பார்த்து, அதன் ஆழ, அகலப் பரிமாணங்களை நுணுக்கமாக வெளிப்படுத்தும் கலை தான், திறனாய்வு கலை. அந்த திறனாய்வு கலை நுட்பங்களை, இந்த நூல் அழகாக வெளிப்படுத்துகிறது. தமிழில் படைப்பிலக்கியங்களாக கருதப்படும் நாவல், சிறுகதை, கவிதை, நாடகம் முதலானவற்றின் தோற்றத்தையும், வளர்ச்சியையும் விளக்கியுள்ளார் முனைவர் ந.வெங்கடேசன். சிறுகதை எழுதுவது எப்படி? எனக் கற்றுக் கொடுக்கும் நோக்கில், உருவாக்கப்பட்டுள்ள இந்த நூல் பாட நூலாகும் தகுதி கொண்டது.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை