/ வாழ்க்கை வரலாறு / இளம்பிறை எம்.ஏ.ரஹ்மான்

₹ 150

இருட்டடிப்புகளை மீறி வெளிச்சத்துக்கு வந்தவர் என்ற முத்தாய்ப்புடன் எழுதப்பட்டுள்ள வாழ்க்கை வரலாற்று நுால். இளம்பிறை இதழை துவங்கி நடத்திய ரஹ்மானின் வாழ்க்கை நிகழ்வுகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.சிவகங்கை மாவட்டம், திருப்புத்துாரில் பிறந்து, இலங்கையில் வாழ்ந்ததுவரை நிகழ்வுகள் மிகவும் விரிவாக பதிவு செய்யப்பட்டுள்ளன. எழுத்து, இலக்கியம், இதழ் வெளியீடு, அச்சகம், பதிப்பகம் என வாழ்க்கை விரிந்து செல்வது காட்டப்பட்டுள்ளது.இலங்கை தமிழ் இலக்கியத்தில் அழுத்தமான தடம் பதிக்க எடுத்துக்கொண்ட முயற்சி மற்றும் உழைப்பு பற்றி தெளிவாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரது இதழில் வாசகராக இருந்தவரே, இந்த வாழ்க்கை வரலாற்று நுாலை படைத்து உள்ளது சிறப்பு.– மதி


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை