/ வாழ்க்கை வரலாறு / இளம்பூரணரின் வாழ்வும் புலமையும்

₹ 150

தொல்காப்பிய உரையின் தந்தை எனப் போற்றப்படும் இளம்பூரணர் வாழ்வும், புலமை அனுபவமும் பதிவாகியுள்ள நுால். மூல நுாலாசிரியர் கருத்தை வெளிப்படுத்துதல், பிறமொழி பயிற்சியோடு உரை எழுதுதல், வினா- விடைப் பாங்கு, சொற்பொருள் தருதல், பல்துறை அறிவை வழங்குதல், மேற்கோள் காட்டுதல், வாழ்வியல் கூறுகள் புலப்படும் வகையில் எழுதுதல், பாட வேறுபாடுகளைத் தருதல் என உரை மரபு சிறப்புகள் கூறப்பட்டுள்ளன.உரை நயங்களும், திறனும் விரித்துரைக்கப்பட்டுள்ளன. மேற்கோள்கள் நிரல் படுத்தப்பட்டுள்ளன. இளம்பூரணர் பெயர் காரணம், சைவ சமண கருத்து வேறுபாடுகள் விவாத பொருளுடன் இடம் பெற்றுள்ளன. ஆய்வாளர்களுக்கு பயனுள்ள நுால்.– புலவர் சு.மதியழகன்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை