/ கதைகள் / இலங்கை கிராமத்து முஸ்லிம்களின் வாய்மொழிக் கதைகள்

₹ 60

பக்கம்: 127 வாய் மொழியாய் உலவும் கதைகள், உலகில் எல்லா மொழிகளிலும் காணப்படுகின்றன. எழுத்து மொழிக்கு முந்தையது வாய் மொழியாகும். நாட்டாரியல் என்பது அண்மைக் காலமாய், ஒரு தனித்துறையில் வளர்ந்துகொண்டிருக்காது. அதில் முக்கியமானது வாய்மொழியாய்ப் புழக்கும் நாட்டுப்புறக் கதைகள் தாம். இந்தக் கதைகள் யாவும், ஏதோவொரு வாழ்வியல் பயனை மையமாக வைத்தே சொல்லப்பட்டவை.நூலாசிரியர், இலங்கை நாட்டுப்புற முஸ்லிம் மக்களிடையே வழங்கி வரும், நாட்டார் கதைகளை அரும்பாடுபட்டு சேகரித்து, 35 கதைகளாகத் தொகுத்து தந்திருக்கிறார்.மிகவும் சுவாரஸ்யமான கதைகள், வட்டார வழக்குச் சொற்களை, நூலாசிரியர் மண்வளச் சொற்கள் என்ற தொடரால் குறிப்பிட்டு, அவற்றிற்கு உரிய பொருளையும் ஒவ்வொரு கதையின் முடிவிலும் தந்திருக்கிறார். எனினும், அவை போதாது என்றே தோன்றுகிறது. அடுத்த பதிப்பில், இந்தக் குறை நீக்கப் பெறும் என்று நம்பலாம். படிக்கச் சுவையான நூல்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை