/ ஆன்மிகம் / இளையோர் மஹாபாரதம்

₹ 140

இதிகாசத்தை குழந்தைகளுக்கு ஏற்ற வகையில் கதைகளாக தரும் நுால். வீட்டுப் பாடங்களை முடித்து அயர்ந்திருப்போர், சுவாரசியமாக ரசிக்கும் வகையில் நயமுடன் உருவாக்கப்பட்டுள்ளது. இதிகாச நிகழ்வுகளை குழந்தைகள் புரிந்து கொள்ளும் வகையில் எழுதுவது கடினம். அது, லாவகமாக இந்த புத்தகத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.மகாபாரதத்தில் கடினமான பகுதிகள், பகவத் கீதை பகுதிகளை ஆர்வமாக படிக்கும் வகையில் கதையாக மாற்றப்பட்டுள்ளது. மகாபாரத போர் பற்றிய விவரிப்பும் விறுவிறுப்பாக உள்ளது. அதில் உள்ள முக்கிய கதாபாத்திரங்களை அருமையாக அறிமுகம் செய்கிறது. கிருஷ்ண பகவானின் லீலைகளை கோடிட்டு காட்டி கருத்து புகட்டும் நுால். – தி.செல்லப்பா


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை