/ கட்டுரைகள் / இமயமலை சும்மாதானே இருக்கிறது (தொகுதி – 3)
இமயமலை சும்மாதானே இருக்கிறது (தொகுதி – 3)
சந்திப்புகளையும், நேரில் பார்த்தவற்றையும் தொகுத்து தரும் நுால். மிக சாதாரண நிகழ்வுகளையும் சுவைமிக்கதாகி எழுதும் எழுத்தாளர் முத்துலிங்கத்தின் திறன் வியக்க வைக்கிறது.உலகில் முக்கிய நிகழ்வுகளையும், அது சார்ந்து நடப்பவற்றையும் தீவிரமாக கவனித்து கட்டுரைகள் எழுதப்பட்டுள்ளன. நவீனமாக புனையப்பட்ட சிறுகதைகளை பல ஆக்கங்கள் நினைவூட்டுகின்றன. வாழ்வு அனுபவங்களை இனிமையாக வெளிப்படுத்த முடியும் என்பதற்கு உதாரணமாகியுள்ளன.முன்னாள் முதல்வர் கருணாநிதியின் திறன்களை வேறு கோணத்தில் ஒரு கட்டுரை வெளிப்படுத்துகிறது. சாதாரண நிகழ்வுகளை வித்தியாசமான கோணங்களில் எழுத்தாக்கியுள்ள ஆக்கங்களின் தொகுப்பு நுால்.– ராம்