/ தமிழ்மொழி / ஐம்பெருங் காப்பியம் சீவக சிந்தாமணி (இரண்டாம் பாகம் மூலமும் உரையும்)

₹ 500

சமண காப்பியமான சீவக சிந்தாமணியின் பாடல்களுக்கு பொழிப்புரையுடன் அருஞ்சொல் விளக்கம் தரும் நுால். குணமாலையார், பதுமையார், கேமசரியார், கனகமாலையார், விமலையார் என ஐந்து இலம்பகங்களை உடையது.மன்மதனை, ஐங்கணைக்கிழவன் என்ற அழகான தமிழ்ச் சொல்லால் குறிப்பிடுகிறது. ஒவ்வொரு பாடலுக்கும் எளிய உரை தரப்பட்டுள்ளது. ஒலிகளை கவிநயத்தோடு விளக்குகிறது. சமண சமயக் கருத்துகள் விரவிக் காணப்படுகின்றன. உரை வளத்தால், சிலேடை அணி. சொற் பொருட் பின்வரு நிலையணி வகைகளை அறிய முடிகிறது. இலக்கியச் சுவையும், காவியச் சுவையும் நிரம்பிய நுால். – பேராசிரியர் இரா.நாராயணன்


சமீபத்திய செய்தி