/ ஆன்மிகம் / பிரத்யங்கிராவைத் தேடி
பிரத்யங்கிராவைத் தேடி
சக்தி சாம்ராஜ்ஜியத்தில் கோலோச்சிக் கொண்டிருக்கும் வேதத்தின் நாயகி, பிரத்யங்கிரா தேவியின் வரலாற்றைக் கூறும் நுால். அவதார மகிமையை விளக்குகிறது.ரிஷிகளின் பக்தியால் மகிழ்ந்து அவதரித்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதர்வண வேத அதிபதியாக மக்களை காக்கும் வரமளித்து உள்ளது. வழிபாடு, உபாசனை குரு வழியாக அறிந்து செய்ய கூறுகிறது. வீர சரபேஸ்வரரை வழிபடுவோருக்கு பாவங்கள் போகும் என்கிறது. ஜெபிக்கும் 48 மந்திரங்கள் பற்றியும் உள்ளது. நரசிம்ம அவதாரக் கதை முழுதும் உணர்ச்சி ததும்பக் கூறப்பட்டுள்ளது. அவதாரம் நிகழ்ந்த நிலப்பகுதியை வரைபடத்துடன் விளக்குகிறது. ஸ்ரீதேவி உபாஸகர்கள் படிக்க வேண்டிய நுால்.– புலவர் ரா.நாராயணன்