/ இலக்கியம் / இந்திய இலக்கிய சிற்பிகள்: கா.மீனாட்சிசுந்தரம்
இந்திய இலக்கிய சிற்பிகள்: கா.மீனாட்சிசுந்தரம்
இந்திய இலக்கிய சிற்பிகள் வரிசையில் வெளியிடப்பட்டுள்ள நுால். கா.மீனாட்சிசுந்தரம் வாழ்க்கை, இலக்கியப் படைப்புகள் தொடர்பான செய்திகளை உள்ளடக்கியது. பிறப்பு, திருமண வாழ்க்கை, குடும்பச்சூழல், பள்ளி, கல்லுாரிப் படிப்பு, முனைவர் பட்ட ஆய்வு, வகித்த ஆசிரியப் பணிகள், தமிழ்த் தொண்டுகள், இலக்கியப் படைப்புகளை விவரிக்கிறது. கடமையை முடிப்பதில் கடுமையான உழைப்பு, இன்னல்களிலும் எடுத்த செயலிலும் விடாமுயற்சி, வாழ்வின் எதிர்பாராத திருப்பங்கள், இன்றைய ஆசிரியர்களுக்கு வழிகாட்டக் கூடியவை. மொழியியல், சொற்களஞ்சியப் பணிகள் பற்றிய குறிப்பையும் தருகிறது. இலக்கிய ஆய்வுகளுக்கு பயன்படும் எண்ணற்ற செய்திகள் அடங்கிய நுால். – கவிஞர் மெய்ஞானி பிரபாகரபாபு




