/ இலக்கியம் / இந்திய இலக்கிய சிற்பிகள்: ந.சுப்புரெட்டியார்
இந்திய இலக்கிய சிற்பிகள்: ந.சுப்புரெட்டியார்
தமிழில் அரிய நுால்களை படைத்துள்ள பேராசிரியர் சுப்பு ரெட்டியார் வாழ்க்கை வரலாற்று நுால். பயணம், இலக்கிய திறனாய்வு கட்டுரைகள் எழுதியது குறித்த விபரங்களும் உள்ளன. சுப்பு ரெட்டியாரின் பிறப்பு, கல்வி, திருமணம், ஆசிரியர் பணி என சுய விபரங்களை முதல் பகுதி விளக்குகிறது. இரண்டாம் பகுதியில் அவரது சிறப்பியல்புகள் தரப்பட்டுள்ளன. பகுத்தறிவு மற்றும் உதவும் உள்ளத்துடன் செயல்பட்ட பாங்கை எடுத்துரைக்கிறது. ஆசிரியர், தலைமையாசிரியர், பேராசிரியர் என கல்விப்பணிகள் குறித்து சொல்லப்பட்டுள்ளது. இலக்கியத் திறனாய்வு, பயண இலக்கியம் என பல தளங்களில் இயங்கியதை அறிமுகம் செய்கிறது. தமிழுக்கு தொண்டாற்றிய வாழ்க்கை வரலாற்று நுால். – முகிலை ராசபாண்டியன்




