/ வாழ்க்கை வரலாறு / இந்திய இலக்கியச் சிற்பிகள் பாவலரேறு பெருஞ்சித்திரனார்
இந்திய இலக்கியச் சிற்பிகள் பாவலரேறு பெருஞ்சித்திரனார்
பெருஞ்சித்திரனார் பள்ளிப் பருவம் துவங்கி, இறுதிக் காலம் வரை தமிழ் மீது தீராத காதல் கொண்டு இயங்கியதை வெளிப்படுத்துகிறது இந்நுால்.பாவலரேறு இயற்றிய, நாற்பதுக்கும் மேற்பட்ட இலக்கியங்களில் ஆழமாக பொதிந்துள்ள பொருட்களையும், சுவைகளையும் கூறும் ஆசிரியர், அவற்றில் மறைந்துள்ள வரலாற்றுத் தரவுகளையும் மேற்கோள் காட்டி விளக்குகிறார். தனித்தமிழ் இயக்கத்தில் பற்று கொண்டோருக்கு மிகவும் பயனுள்ள நுால் இது என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.