/ வரலாறு / இந்தியக் காடுகள்

₹ 220

மனித வாழ்வுக்கு ஆதாரமாக உள்ள காடுகள் பற்றிய விபரங்களை தொகுத்து தரும் நுால். வளத்தில் துவங்கி, காட்டின் வகைகள், பாதுகாப்பு என விரிகிறது. மக்களின் சமத்துவம் காடு; சமத்துவம் சிதைந்தால் அழிவு பிறக்கும் என்ற பொன்மொழியுடன் புத்தகம் துவங்குகிறது. காட்டின் முக்கியத்துவம், இலக்கியத்தில் காடு பற்றி கூறப்பட்டுள்ள தகவல்கள், காடுகளின் வகைகள் குறித்து விவரிக்கின்றன.புத்தகத்தில், 13 தலைப்புகளில் தகவல்கள் தொகுக்கப்பட்டுள்ளன. இந்தியாவின் முக்கிய காடுகள் பற்றிய விபரமும் தரப்பட்டுள்ளது. காட்டை பாதுகாக்க வலியுறுத்தும் தகவல்களை கொண்டுள்ள நுால்.– மதி


புதிய வீடியோ