/ வாழ்க்கை வரலாறு / இந்தியா முழுவதும் உள்ள பட்டியல் இன சாதிகளும் தொழில்களும்
இந்தியா முழுவதும் உள்ள பட்டியல் இன சாதிகளும் தொழில்களும்
இந்தியாவில் பட்டியலின மக்களின் நிலை குறித்து எடுத்து கூறும் நுால். பட்டியலினம் பற்றி விரிவாக தகவல்களை தருகிறது.உலகில் வேறு எங்கும் இல்லாத அளவு ஜாதி பிரிவினை இந்தியாவில் உள்ளது. அது பற்றி, 36 தலைப்பில் தொகுத்து வழங்குகிறது. மாநில வாரியாக பட்டியலின மக்கள் பற்றி விபரம் தருகிறது. எந்தெந்த பகுதிகளில் எந்த இன மக்கள் வசிக்கின்றனர் என்பதை துல்லியப்படுத்துகிறது. மக்கள் தொகை அளவு பற்றியும் குறிப்பிடுகிறது. குறிப்பிட்ட ஜாதி மக்கள் செய்யும் தொழில்கள் பற்றிய விவரிப்பு, வியப்பு ஏற்படுத்தும் தகவல்களாக உள்ளன. இந்தியாவில் மக்கள் ஜாதிகளாக பிரிந்துள்ளதை புரிய உதவும் நுால்.– ராம்