/ வரலாறு / இந்திய நாடு என் நாடு
இந்திய நாடு என் நாடு
இந்திய வரலாறு, மாநிலங்கள், நதிகளின் பெருமைகளை கூறும் நுால். தேசிய விடுதலை போராட்டம், மாநிலங்களின் வரலாறு, ஜனாதிபதி, பிரதமர் சேவை, இமயம், கங்கை நதி என தேச பரப்பு பற்றி விவரிக்கிறது. சிந்து நதி கலாசாரம், மவுரிய சாம்ராஜ்யம், அசோகர் ஆட்சி, புத்த மதம் பரவல், இஸ்லாமியர், ஆங்கிலேயர் ஆட்சி பரவலை தெரிவிக்கிறது. தேசிய சின்னங்கள், பறவை, விலங்கு, மரம், மலர் பற்றி தெரிந்து கொள்ளும் ஆர்வத்தை துாண்டுகிறது. மாநிலம் குறித்த விபரங்களுடன் அவற்றின் இயற்கை வளம், உற்பத்தி, சுற்றுலா தலங்கள் குறித்த தகவல்களும் உள்ளன. மாணவர்களுக்கு தேசப்பற்றை உருவாக்கும் வகையில் அமைந்த நுால். – முனைவர் மா.கி.ரமணன்