/ புத்தக மதிப்புரை / இந்திய சமூக புரட்சியின் தந்தை ஜோதிராவ் புலே

₹ 185

தீண்டாமைக்கு எதிராக போராடிய ஜோதிராவ் புலேயின் வாழ்க்கை வரலாற்று நுால். பெண்களுக்கு முதல்முறையாக பள்ளி அமைத்தது பற்றிய விபரங்கள் கூறப்பட்டுள்ளன. கர்ப்பிணிகளுக்கு காப்பகம் ஏற்படுத்தியது குறித்தும் எடுத்துரைக்கிறது. கல்வி, சமூகம், அரசியல் ரீதியாக புதிய மாற்றங்களை உருவாக்கியது குறித்த விபரங்கள் தரப்பட்டுள்ளன. ஜாதி அமைப்பு சமத்துவத்துக்கு எதிரானது என போராடியதை எடுத்து கூறுகிறது. ஒடுக்கப்பட்ட மக்களின் துயர வாழ்வுக்கு முடிவு கட்டும் வகையில் போராட்டங்களை முன்னெடுத்ததை தெளிவாக எடுத்து கூறுகிறது. பின்தங்கிய சமூகத்தில் மாற்றம் ஏற்பட பாடுபட்டவரின் வாழ்க்கையை எளிய நடையில் அறிய தரும் நுால். – மதி


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை