/ விளையாட்டு / இந்திய சாதனையாளர்கள் ஓட்டப்பந்தயம்
இந்திய சாதனையாளர்கள் ஓட்டப்பந்தயம்
ஓட்டப் பந்தயத்தில் சாதித்த இந்திய வீராங்கனைகளை அறிமுகம் செய்யும் நுால். விளையாட்டில் ஆர்வமுள்ளோருக்கு உதவும்.சர்வதேச அளவில் ஓட்டப்பந்தயத்தில் சாதனை படைத்த பி.டி.உஷா உட்பட, 17 வீராங்கனைகளை அறிமுகம் செய்கிறது. வீராங்கனைகளின் பிறப்பு, இளமை வாழ்க்கை, கடும் உழைப்பு, பயிற்சி, சாதனைகள் என முறையாக தகவல்கள் தரப்பட்டுள்ளன.வாழ்க்கை, பெற்ற விருதுகள், சாதனைக்கு பின்னணியாக அமைந்திருந்த காரணிகள் என வரிசைப்படுத்தி தரப்பட்டுள்ளன. சாதிக்க விரும்பும் பெண்களுக்கு, இந்த வீராங்கனைகளின் வாழ்க்கை குறிப்புகள், நம்பிக்கையாக உதவும். விளையாட்டு வீரர்கள் பற்றிய நுால்.– ஒளி