/ வரலாறு / இந்திய சுதந்திரத்தின் தியாக தீபங்கள்

₹ 150

சுதந்திரத்திற்காக அர்ப்பணித்த, 14 தியாக தலைவர்களின் வரலாற்றை கூறும் நுால். போராட்டம், தியாகம், பொது வாழ்வு தான் இவர்கள் கண்டது என்கிறது. சுதந்திரம் பெற கையாண்ட யுக்திகளை, வெள்ளையரை வீழ்த்திய வழிமுறைகளை விவரிக்கிறது. தேசியக் கொடியைக் காக்க, ரத்தம் சிந்திய திருப்பூர் குமரன், ஆஷ்துரையை கொன்ற வாஞ்சிநாதன் தியாகம் பற்றி எல்லாம் பேசுகிறது. அனைவருக்கும் நோக்கம், சுதந்திரக் காற்று என்றாலும், அவரவர் சிந்தனையில் உருவான போராட்ட வடிவை, எளிய நடையில் தருகிறது. இளைய தலைமுறை வாசிக்க வேண்டிய நுால்.– டி.எஸ்.ராயன்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை