/ வரலாறு / இந்திய வரலாறு பொய்யும் மெய்யும்
இந்திய வரலாறு பொய்யும் மெய்யும்
வேதங்கள், உபநிடதங்கள் மற்றும் சங்க இலக்கிய நுால்களை மேற்கோள் காட்டி, அறிவியல் சாதனைகளை எடுத்துரைக்கும் நுால். அணுக் கொள்கை, 2,600 ஆண்டுகளுக்கு முன், மகரிஷி கணாதர் உருவாக்கியது என கூறுகிறது. இவரே புவியீர்ப்பு விசையை கண்டறிந்தார் என்றும் கூறப்பட்டுள்ளது. கோள்களின் இயக்கத்தை வள்ளுவரே கண்டறிந்தவர் என, ‘சுழன்றும் ஏர்பின்னது உலகம்’ என்ற குறட்பாவை மேற்கோள் காட்டுகிறது. மேம்பட்டிருந்த இந்திய அறிவை விளக்கும் நுால்.– புலவர் சு.மதியழகன்