/ வரலாறு / இந்தியாவில் கடல் கோட்டைகள்

₹ 275

பண்டைய வரலாற்றின் எச்சங்களாக, இந்தியக் கடற்கரையில் நிமிர்ந்து நிற்கும் கோட்டைகள் பற்றிய வரலாற்று பின்னணியுடன் அமைந்த நுால். மொத்தம், 11 இயல்களாக பகுத்து எழுதப்பட்டுள்ளது. முதல் கட்டுரை, ‘கடல் கோட்டைகளின் முன்னோடி’ என்ற தலைப்பில் அமைந்துள்ளது. வரலாற்று பின்னணியுடன் தெளிவான தகவல்களைக் கொண்டுள்ளது. அடுத்து, இந்தியாவில் கடல் கோட்டைகள் தோன்றிய பின்னணி விபரம் தரப்பட்டுள்ளது. முதற் கடல் கோட்டை உருவாக்கம், அபிசீனியர்கள் அமைத்த வெற்றிக்கோட்டைகள், போர்த்துகீசியர் உருவாக்கிய மலபார், கோவா, மராட்டிய பகுதி கோட்டைகள் பற்றி தெளிவாக விவரிக்கிறது. மராட்டிய மன்னன் சத்ரபதி சிவாஜி மற்றும் ஆங்கிலேயர் கட்டிய கடல் கோட்டைகள் பற்றிய தகவல்களையும் கொண்டுள்ளது.இறுதியாக, ‘காதலும் கடற்கோட்டைகளும்’ என்ற தலைப்பில் சுவாரசியம் மிக்க தகவல்களுடன் கட்டுரை உள்ளது. வரலாற்று பின்புலம் மற்றும் இலக்கிய நயத்துடன் எளிய நடையில் அமைந்துள்ள நுால்.– ஒளி


சமீபத்திய செய்தி