இருபதாம் நூற்றாண்டின் தலைசிறந்த மார்க்சியர்களில் ஒருவர், அந்தோனியோ கிராம்சி. இத்தாலியில் பிறந்த கிராம்சி, டூரின் பல்கலைக்கழகத்தில் பயின்றவர். முதலாம் உலக யுத்தம் துவங்கியதும், தன் படிப்பை உதறித் தள்ளி விட்டு, முழுநேர தொழிற்சங்கவாதியாக மாறினார் கிராம்சி.இத்தாலிய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமைப் பொறுப்பில் தீவிரமாகப் பணியாற்றிய அவர், முசோலினியின் பாசிச ஆட்சிக்கு எதிராகத் தொடர்ச்சியாகப் போராடினார். இதற்காக, 1926ல் கைது செய்யப்பட்டார். பாசிச அரசு அவருக்கு, 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கியது. பாசிச சிறையின் மோசமான ஒடுக்குமுறையும் கொடிய நோயும் இவரை உருக்குலைத்தன. மருத்துவ காவலில் சிகிச்சை பெற்ற கிராம்சி, தன், 46வது வயதில் மரணமடைந்தார். அவர் சிறையில் இருந்த காலத்தில், இத்தாலியின் வரலாறு, கல்வி, பொருளாதாரம் குறித்த தன் எண்ணங்களையும் மாற்றுச் சிந்தனைகளையும், 3,000 பக்கங்கள் கொண்ட, 32 குறிப்பேடுகளில் எழுதினார். கிறுக்கலாகவும், சங்கேத மொழியிலும் எழுதப்பட்ட அந்த குறிப்புகள், சிறையிலிருந்து மீட்கப்பட்டு இத்தாலியில் வெளியிடப்பட்டன.கடந்த, 1929க்கும், 1935க்கும் இடையில், சிறையில் கிராம்சி எழுதிய குறிப்புகளில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதிகளை, வான்முகிலன், சிறப்பாகத் தமிழில் மொழியாக்கம் செய்திருக்கிறார். பண்பாட்டினை கட்டுப்படுத்துதல்: கிராம்சியின் பண்பாட்டு மேலாண்மை பற்றிய எண்ணங்களும், குடிமைச் சமூகம் பற்றிய கருத்தாக்கமும், மிக முக்கியமான கோட்பாடுகள். பொதுவாக ஆளும் வர்க்கங்கள், மக்களை அடக்கி ஒடுக்குவதற்கு வன்முறையை மட்டும் தேர்வு செய்வதில்லை. பொய்யான பண்பாட்டுப் பிம்பங்களை, கருத்தாக்கங்களை உருவாக்கி, மக்களை நம்பவைத்து, தங்களின் அதிகாரத்தை நிறுவிக் கொள்கின்றன. ஒரு நாட்டைக் கைப்பற்றும் வேற்றுநாட்டு அரசன், அந்த நாட்டின் பண்பாட்டினை ஏற்றுக் கொண்டால், எளிதாக அவனால் அரசாள முடியும்; மக்கள் தன் பண்பாட்டினை மதிக்கும் ஒருவனை எளிதாக ஏற்றுக் கொண்டுவிடுவர். உண்மையில் இது ஒரு தந்திரம். அதிகாரம் இப்படிப் பண்பாட்டினை தனதாக்கி கொள்வதன் வழியே, தன் அதிகாரத்தை எளிதாக நிறுவி கொள்கிறது. இதற்கு மாற்றாக இன்னொரு வழியும் இருக்கிறது. அது, அந்த நாட்டின் தனித்துவமிக்கப் பண்பாட்டினை அழித்துவிட்டு, வேறொரு பண்பாட்டினை, மக்களை ஏற்றுக் கொள்ளச் செய்வது. இதைக் கட்டாயமாகவோ, பொய்யான பரப்புரைகள் மூலமாகவோ நிறைவேற்றிக் கொள்வதும் அதிகாரத்தின் இயல்பே என்கிறார் மெக்கிவெல்லி. அதிகாரத்தை நிறுவுவதில், பண்பாடு முக்கியப் பங்கு வகிக்கிறது. ஆகவே, பண்பாட்டினை கட்டுப்படுத்துதல் என்பது, சமூகத்தைக் கட்டுப்படுத்துதல் என்பதாகவே உருமாறுகிறது. இந்தக் கோட்பாட்டினை முன்னிலைப்படுத்தி, கிராம்சி, இத்தாலியின் வரலாற்றையும் பண்பாட்டினையும், தெளிவாக விளக்குகிறார். அறிவு ஜீவிகள் யார்?: கிராம்சி வலியுறுத்தும் ‘பண்பாட்டு மேலாண்மை’யை, நாம் இந்திய சமூகத்தோடு பொருத்திப் பார்ப்பதன் வழியே, இந்தியாவின் வரலாற்றை, காலனியாக்கப்பட்ட விதத்தை, நாம் வேறுவிதத்தில் புரிந்து கொள்ள முடிகிறது. இன்றைய நவீனயுகத்தில், ஏகாதிபத்தியம் பண்பாட்டின் பெயரால் நுழைந்து, சமூகக் கட்டமைப்புகளை மெல்ல அழித்து ஒழிக்கிறது. இரண்டு விதங்களில் இந்த செயல் நடைபெறுகிறது. ஒன்று, மரபான மூடநம்பிக்கைகளையும், பழக்கவழக்கங்களையும் ஆதரிப்பதன் மூலமும், அதற்கு எதிரான மாற்றுச் சிந்தனைகள் உண்டாகாமல் தடுப்பதன் மூலமும். இரண்டாவது, முற்றிலும் வேறுபட்ட அந்நிய பண்பாட்டை, சந்தை காரணங்களுக்காக உள்ளே நுழைத்து, அதை உயர்வான பண்பாடு என, மக்களை நம்ப வைத்து மாயையை உருவாக்குகிறது. இதுதான் ஏகாதிபத்தியத்தின் அடையாளம் என காட்டுவது என்கிறார் கிராம்சி. அறிவுஜீவிகள் என்போர் யார், அவர்கள் எதனால் அறிவுஜீவிகளாக அடையாளம் காணப்படுகின்றனர், ஒவ்வொரு சமூகக் குழுவும் தன் சொந்த அறிவுஜீவி வகையினரை உருவாக்கிக் கொள்கிறதா என ஆராயும் கிராம்சி, அதன் உருவாக்கத்தின் பின்னுள்ள கருத்தியல்களைத் துல்லியமாக ஆராய்கிறார். நகர்ப்புற அறிவுஜீவிகள், எப்படி கிராமப்புற அறிவு ஜீவிகளிடமிருந்து வேறுபடுகின்றனர் என்பதை ஆராயும் கிராம்சி, இந்தியாவிலும், சீனாவிலும், அறிவுஜீவிகளையும் மக்களையும் பிரிக்கும் இடைவெளி, மதரீதியான தளத்தில் வெளிப்படுகிறது எனக் குறிப்பிடுகிறார். கல்வி பற்றிய கிராம்சியின் எண்ணங்கள், முக்கியமான மாற்றுச் சிந்தனைகளாக முன்வைக்கப்படுகின்றன. குறிப்பாக கல்விக்கும் வர்க்கத்திற்குமான உறவு, உத்தியோகமயக் கல்வி, கல்வி பற்றிய சிந்தாந்தம் ஆகியவற்றை விரிவாக ஆராயும் கிராம்சி, சமூக நடவடிக்கைகளில் பங்குபெற ஒருவனின் கல்வி, எவ்வாறு துணை நிற்க வேண்டும் என, விளக்குகிறார்.இதற்காகப் பொதுப்பள்ளி உருவாக்கத்தின் பின்புலத்தையும், அதற்கான கல்வி கொள்கைகள் பற்றியும் நுட்பமாக எழுதியிருக்கிறார். பொருளாதாரம், வர்க்கம் என்ற அளவைகளை அடிப்படையாகக் கொண்டு, மேற்கு ஐரோப்பியச் சூழல்களில் மார்க்சியக் கோட்பாடு உருவானது.ஐரோப்பா மட்டுமின்றி, மூன்றாம் உலக நாடுகளிலும் நிறவெறி, ஆணாதிக்கம், ஜாதி அமைப்பு, பழங்குடிச் சமூகங்கள், தேசிய இன அடையாளங்கள் போன்ற சூழல்களை எதிர்கொள்ளும்போது, என்ன விதமான நிலைப்பாடுகளை முன்வைக்கிறது, என்ற கேள்வியை எழுப்பும் பேராசிரியர் ந.முத்துமோகன், தனது ‘பன்மீயக் கட்டமைப்புகளும் மார்க்சியமும்’ என்ற கட்டுரையில், ௨௦ம் நூற்றாண்டின் மத்தியில், பன்மீய அமைப்புகள் என்ற யதார்த்தத்தை, ஏதோ ஒருவகையில் சந்தித்து, அதை எதிர்கொண்டோராகக் கிராம்சியையும், அல்த்தூசரையும் குறிப்பிடுகிறார். அரசியல் ஆவணம்: கிராம்சி, பண்பாட்டு அரசியல், குடிமைச் சமூகம் போன்ற கருத்தாக்கங்களைச் சென்று சேர்ந்தவர். அந்தோனியோ கிராம்சியின் ‘ஹெக்ரிமோனி’ என்ற கருத்தாக்கம், தமிழில் மேலாண்மை என்று மொழிபெயர்க்கப்படுகிறது. அந்த கருத்தாக்கம், ௨௦ம் நூற்றாண்டின் துவக்கத்தில், தொழிலாளர் வர்க்க மேலாண்மை என்ற பொருளில் ஒலித்தது உண்மைதான். ஆயின், அதை கிராம்சி பயன்படுத்தியபோது, கிராம்சிக்குப் பின் எடுத்தாளப்படும்போது, அதற்கு ‘மேலாண்மை’ என்ற பொருள் அவ்வளவு சரியானதாக அமைவதில்லை. பலவகைச் சமூக முரண்களை ஒன்றுபடுத்தும் அரசியலை, அது முன்வைக்கிறது. ஏதாவது ஒருவகைச் சமூக முரணை முந்தியதாகக் காட்டாமல், முரண்களை ஒருங்கிணைக்கும் அரசியலை அது முன்மொழிகிறது என, ந.முத்துமோகன் குறிப்பிடுவது, இந்த நூலை வாசிக்கும் போது கவனிக்க வேண்டிய ஒன்றாகத் தோன்றியது. கிராம்சியைப் புரிந்து கொள்வதும், அவரிடமிருந்து பாடம் கற்றுக்கொள்வதும், மாற்று அரசியலுக்கும், பொதுவுடைமை சித்தாந்தத்தின் அடுத்த நிலைக்கும், மிகவும் உபயோகமாக இருக்கும். அந்த வகையில், இது மிக முக்கியமான அரசியல் ஆவணம்.– எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன்
அந்தோனியோ கிராம்சி – தேர்ந்தெடுக்கப்பட்ட சிறைக் குறிப்புகள்
-
விஜயா பதிப்பகம், 20, ராஜ வீதி, கோவை-641 001. (பக்கம்: 48)."நான் யார்' என்ற கேள்வி எளிதாகத் தோன்றினும், புராணகால நதிகேசன் முதற்கொண்டு சுவாமி விவேகானந்தர் வரையிலான பேரருளாளர்கள் யாவும் உரிய விடை காண இயலாது தத்தளித்து வந்திருக்கின்றனர். பகவான் ரமணரும் இதற்கு விதிவிலக்கல்ல! "நான்' எனும் மூலத்தை தேடும் வேட்கையில், பரமாத்ம சொரூபமும், நமது ஆத்ம சொரூபமும் ஒன்றே என மெய்யாகக் கண்டுணர்ந்த மாமுனிவர், இந்த "சத்-சித்-ஆனந்தம்' எனப்படும் நித்திய ஆனந்த நிலையை அடைந்திடும் நெறிமுறைகளை அருளுரைகளாக உலகினர் உய்யும் பொருட்டு வழங்கியுள்ளார். சுருக்கமாக, இறைவனுக்கும் நமக்கும் உள்ள தொடர்புகள் நன்கு புலப்படும்போது ஒவ்வொருவரும் பண்பட்ட மாமனிதராக, ஞானியாக வழிகோலுகிறது! ஆன்மிக ஆர்வலர்களுக்கு சிறந்த சிறியதோர் கையேடு.
-
நக்கீரன் பதிப்பகம், 106/4, ஜானி ஜான்கான் தெரு, ராயப்பேட்டை, சென்னை-14. (பக்கம்: 120).மக்கள் குடியரசுத் தலைவராக மலர்ந்து மணம் பரப்பிய அப்துல் கலாம் பற்றிய அரிய குறிப்புகளும், அவரது சிந்தனை வளம் மிக்க அறிவுரைகளும் ஆக 100 செய்திகளைத் திரட்டி சுவையுடன் படைத் துள்ளார் நூலாசிரியர்.புத்தகம் நிரம்ப ஒளிப்படங்கள் மிளிர் கின்றன. "நக்கீரன்' நிறுவனத்தின் தயாரிப் பாக மிக நல்ல தரத்தில் உருவாக்கப் பட்டுள்ள இந்நூல் ஒவ்வொருவர் மனத்திலும் கரத்திலும் இருக்க வேண்டிய தகுதி மிக்கது. நல்ல கருத்துக்களைக் கொண்ட சிறந்த புத்தகங்கள் கனவுகளை வளர்க்கும் கனவுகள் சிறந்த எண்ணங்களை உருவாக்கும். உயர்ந்த எண்ணங் கள் செயல்களை உருவாக்கும் கலாம் நூலில் ஒன்று இது.
-
கிழக்கு பதிப்பகம், 33/15, எல்டாம்ஸ் ரோடு, ஆழ்வார்பேட்டை, சென்னை-18. (பக்கம்: 168). புத்திசாலித்தனமான போர் உத்திகளின் மூலம் ஒரு நாட்டை ஜெயிப்பது சுலபம். ஆனால், அந்த வெற்றி நிலைத்து நிற்க வேண்டுமானால், உள்ளூர் மக்கள் நம்மை ஆக்கிரமிப்பாளர்களாக நினைக்காமல், அன்பான நண்பர்களாக நினைக்க வேண்டும் (பக்.80) என்று வலியுறுத்திய நெப்போலியன், "மன்னராட்சி வேண்டாம் என்று வருடக் கணக்காகப் போராடி ஜெயித்து, அதே காரணத்துக்காக ஏகப்பட்ட நாடுகளைப் பகைத்துக் கொண்டு, கடைசியில் பிரெஞ்சு சாம்ராஜ்ஜியத்தின் பேரரசாக முடிசூட முடிவெடுத்தார் (பக்.120).போப் ஆண்டவருக்கு முன்னால் தலை குனிந்து வணங்குவதை விரும்பாத நெப்போலியன், அவரிடமிருந்து கிரீடத்தைக் கிட்டத்தட்ட பறித்துக் கொண்டதாகவும், தானே தனக்கு முடிசூட்டிக் கொண்டதாகவும் குறிப்புகள் இருக்கின்றன (பக்.124).அடிமட்டத்திலிருந்து வெற்றியின் உச்சத்திற்கு வேகமாகச் சென்று உயர்ந்த மாவீரன் நெப்போலியன், பிறகு தோல்விகளின் பாதாளத்தையும் தொட்ட வரலாற்றை மிகவும் சுருக்கமாகவும் எளிய நடையிலும் ஆசிரியர் விவரித்துள்ளார். நெப்போலியன் வரலாற்றை கதைபோல விறுவிறுப்புடன் படிக்கும் வகையில் அமைந்த அழகிய படைப்பு.
-
சுரா பதிப்பகம், 1620, "ஜே' பிளாக், 16வது பிரதான சாலை, அண்ணா நகர், சென்னை-40. (பக்கம்: 114). பாரதியார் வரலாறு, பாரதி பாடல்கள் நமக்கு தண்ணீர் பட்ட பாடு. ஆசிரியர் வித்தியாசமாக பாரதியின் வாழ்வில் நடைபெற்ற சுவையான 98 சம்பவங்களைக் கூறியுள்ளார். பாரதி அன்பர்களுக்கு மிகவும் பிடிக்கும். எல்லாருக்கும் தான். ஆசிரியரின் முயற்சி பாராட்டுக்குரியது.
-
கிழக்குப் பதிப்பகம், 33/15, எல்டாம்ஸ் ரோடு, ஆழ்வார்பேட்டை, சென்னை-600 018. (பக்கம்: 144). பனித் திரை, உலகை மூடியிருக்கும் மார்கழி மாத அதிகாலை நேரத்தில், பாகவதர் பாடும், பக்திப் பாடல்களைக் கேட்டால் முதுகுத் தண்டு சிலிர்க்கும். ஆனந்த பரவச நிலை சித்தரிக்கும்.""பாட்டுக்கு ஒரு புலவன் பாரதியடா!'' என்று பாடினார் கவிமணி தேசிகவிநாயகம் பிள்ளை."பக்திப் பாட்டுக்கு ஒரு பாடகர் எம்.கே.டி.,!' என்று நாம் சற்றும் தயங்காமல் சொல்லி விடலாம்! கேட்பவர் செவிகளில் தேன் பாய்ச்சும் தங்கக் குரல் வேந்தர்! கந்தர்வ கான ஏழிசை மன்னர்!அந்த மகா கலைஞனின் வாழ்க்கையில் நேர்ந்த இன்ப அதிர்வுகளையும் இன்னல் தந்த சரிவுகளையும் - மனம் உருகச் சொல்லும் அற்புத நூல்!ஜெ.ராம்கியின் தனிப் பெரும் சாதனை.
-
நர்மதா பதிப்பகம், 10, நானா தெரு, பாண்டி பஜார், தி.நகர், சென்னை-17. (பக்கம்: 128). விண்வெளி வீராங்கனைகளான கல்பனா சாவ்லா மற்றும் சுனிதா வில்லியம்ஸ் ஆகிய இருவரை பற்றியும் அவர்களது கதைகள் பற்றியும், அவர்கள் சாதித்த விதத்தையும் தொகுத்து அளித்துள்ளார் நூலாசிரியர்.
-
மா.சுந்தரமூர்த்தி, 6, சீத்தாராம் நகர், நெய்வேலி மெயின் ரோடு, வடலூர் - 607 303. முன்னுரையில் ஆசிரியர், புத்தகத்தின் முக்கியத்துவத்தை ஒழுக்கத்திற்கும், பண்புக்கும், குற்றமற்ற தன்மைக்கும் விளக்க எழுதப்பட்டது எனக் குறிப்பிடுகிறார். மொத்தம் 61 தலைப்புகளில், திருக்குறள்கள் மூலம் எளிய முறையில் வாழ்வியலை விளக்குகிறார். கடவுள் யார்? என்று ஆரம்பித்து அகமும் புறமும் அறிதல் என்பதை விளக்கி, மனித உடலையும், உயிரையும் பற்றிக் கூறி, மகிழ்ச்சியாகவும் இன்பமாகவும் எப்படி வாழ்வது என்பதை விளக்குகிறார். வெவ்வேறு மனித உணர்ச்சிகளையும், அதற்கேற்ற குறள்களின் மூலம் விளக்கி தாழ்வு மனப்பான்மையை நீக்கும் வழிமுறைகளை எடுத்துரைக்கிறார். வெளிமனது, உள் மனது இவற்றை அறிவியல் ரீதியாக விளக்கி மனஅழுத்தம், மனப்பதட்டம் இவற்றை நீக்கும் முறைகளையும் விளக்குகிறார். தான் யார் என்ற வினாவிற்கு பல வகைக் கேள்விகள் மூலம் விடை கண்டறியும் விதத்தைக் கூறியுள்ளது, மனோதத்துவ நிபுணர்கள் கூறும் விதங்களை ஒத்துள்ளது. தியானத்தைக் கற்பது எளிது என்று கூறி குறள்கள் மூலம் உதாரணங்கள் குறிப்பிட்டு தியானத்தின் பயன்களை விளக்குகிறார். முதியோர்கள் மற்றும் மாணவர்கள் இவர்களுக்கு ஏற்படும் பல்வேறு இடர்ப்பாடுகளை நீக்கும் வழிகளையும் குறிப்பிட்டிருப்பது புத்தகத்தின் சிறப்பம்சமாகும்.
-
நர்மதா பதிப்பகம், தி.நகர், சென்னை-17. (பக்கம்: 144). இந்து மதத்தின் துடிப்புடன் கூடிய ஆன்மிக விடிவெள்ளி விவேகானந்தர். குறுகிய காலத் தில் துடிப்புடன் நிகழ்த்திய பெரும் சாதனை பாரதத்தின் தவப்பயன்.கடவுளுடன் பேச முடியுமா, முளையிலேயே பிரகாசம், ஆன்மிக ஆர்வம், துறவித் தோன்றல், விவேகானந்த விசுவரூபம், அமெரிக்காவில் ஆன்மிக முழக்கம் என 42 பக்கங்களில் ஆறு தலைப்புகளில் விவேகானந்தரின் வாழ்க்கையை ரத்தின சுருக்கமாக ஆசிரியர் கூறியுள்ளார்.ஏழாவது தலைப்பில் விவேகானந்தரின் 200 மணிமொழிகளை ஆரமாகக் கோர்த்து வாசகர்களுக்கு புத்துணர்வு புதுத் தெம்பு ஊட்டும் புத்தகத்தை ஆசிரியர் படைத்துள்ளார். மனம் ஒன்றி படிக்கும் வாசகர்களுக்கு நல் முடுக்கத்தையும், விழிப்புணர்வையும் நிச்சயம் தரும்!
-
சுரா புக்ஸ், 1620 "ஜே' பிளாக், 16வது பிரதான சாலை, சென்னை-40. (பக்கம்: 154) மாவீரன் பகத்சிங் முதல், கவி ரவீந்திரநாத் தாகூர் முடிய 11 தேசத் தலைவர்களின் பயனுள்ள வாழ்க்கை வரலாறு நூலில் இடம் பெற்றுள்ளது.சிறுவர், சிறுமியர்கள் விடுமுறையில் இந்நூலைப் படித்து, தேசபக்தியை வளர்த்துக் கொள்ள பெரிதும் உதவும்.
-
கலைஞன் பதிப்பகம், 19, கண்ணதாசன் சாலை, சென்னை -600 017. (பக்கம்: 160) "இது சாதாரணக் குழந்தை இல்லை... தெய்வாம்சம் பொருந் திய குழந்தை. ஏழு தலைமுறைக்கு நம்ம குடும்பத்திற்கு பேரும் புகழும் வாங்கித் தரப் போற குழந்தை இது. இவன் உடம்பில் ஓடறது ரத்தம் இல்லே... சங்கீதம்! இப்படி உலகம் முழுக்கப் புகழோடும் பேரோடும் வாழப் போற ஒரு குழந்தையைப் பெற்றுத் தரத்தான் நான் பிறந்தேன்' (பக்:57) என்று தன் தாயாராலும், "ஐந்து வயதில் ராகத்தைக் கண்டுபிடிக்கும் ஞானமும், தாள லயமும், ஏழு வயதில் கச்சேரி செய்யும் அளவுக்கு வித்வமும் பாலமுரளிக்கு வாய்த்துவிட்டன' (பக்:19) என்று குருவாலும் புகழப்பட்ட கருவிலே திருவுடைய இசைமேதையின் வாழ்க்கை வரலாற்றை தனக்கே உரிய "தங்க ரத' நடையில், வெற்றியுலா வரச் செய்துள்ளார் ராணி மைந்தன். ஜூலை., 6, 1930ல் பிறந்து, இசை பயின்று, முதன் முதலாக 72 மேளகர்த்தாக்களில் முதல் ராகமான கனகாங்கி ராகத்தில் கீர்த்தனையைத் தொடங்கி புதுப்புது கீர்த்தனைகளைப் பாடி, இசைக்கல்லூரியின் முதல்வராகி, சென்னைக்கு வந்து இசைமேதையாகி, சரஸ்வதி கடாட்சத்துடன் இசையுலகின் உயரிய விருதுகள் அனைத்தும் பெற்று இன்று அமெரிக்காவிலும் பாராட்டைப் பெற்று விளங்கும் சங்கீத சாம்ராஜ்யத்தின் சக்ரவர்த்தி பால முரளி கிருஷ்ணாவின் இவ்வரலாற்று நூலில் இடம் பெற்றுள்ள பாடல்களும், அமைப்பும் நூலுக்கு மெருகூட்டுகின்றன. பாலமுரளியின் சங்கீதத்தைப் போலவே இந்நூலும் மனநிறைவை அளிக்கக்கூடிய சுவைமிக்கது.
-
நிவேதிதா பதிப்பகம், 1, மூன்றாவது மாடி, புதூர் 13வது தெரு, அசோக் நகர், சென்னை-83. (பக்கம்: 96).திபெத் நாட்டை சீன கம்யூனிஸ்ட் அரசு ஆக்கிரமிக்க முற்பட்டபோது திபெத்தின் பவுத்த வம்சாவளி மத குருவான தலாய் லாமா, சீனர்களின் துரத்தலில் இருந்து தப்பிக்க, இமயமலை வழியே, இந்தியாவுக்குள் புகுந்த வீர தீர சாதனையை சுவைபட எழுதியிருக்கிறார் ஆசிரியர். படித்து இன்புறலாம்.
-
பழனியப்பா பிரதர்ஸ், கோனார் மாளிகை, 25, பீட்டர்ஸ் ரோடு, ராயப்பேட்டை, சென்னை-14. (பக்கம்: 84).நாட்டுக்கு உழைத்த நல்லவர் என்ற தலைப்பில் பள்ளி மாணவர்களுக்காக ஏறத்தாழ இதுவரை 63 தலைப்புகளில் தலைச்சிறந்த தமிழ் இலக்கிய வரலாற்றுப் பேராசிரியர்களை வைத்து எழுதி வெளியிட்ட பெருமைக்குரிய பதிப்பகம் பழனியப்பா. அந்த வரிசையில் ஆசிரியர் கள்ளிப்பட்டி குப்புசாமி, மருது சகோதரர்களைப் பற்றிய வரலாற்றுச் சான்றுடன் கூடிய அற்புதமான நூலை இப்பதிப்பகத்திற்காகப் படைத்துத் தந்துள்ளார். குறிப்பாக முதியவர்கள், மாணவர்கள் போன்றவர்களுக்கு மட்டுமல்லாது குழந்தைகளும் நன்கு புரிந்து தெரிந்து கொள்கின்ற அளவுக்கு எளிய தமிழில் சுவையான நிகழ்வுகளை தந்திருப்பது ஆசிரியரின் எழுத்தாற்றலை இதில் காண முடிகிறது.சிவகங்கைச் சீமை எனத் துவங்கி, பெரிய மருதுவின் வீர உரை என 22 அத்தியாயங்களின் ஒரு சில கோட்டுருப் படங்களுடன் அழகுற உயரிய தாளில் பிழை இல்லாது அச்சாகித் தந்திருக்கின்றனர். ஒவ்வோர் வீட்டிலும் இருக்க வேண்டிய ஒரு வரலாற்று ஆவணம்.
-
அறிவு நிலையம் பதிப்பகம், 32/107, கவுடியா மடம் சாலை, ராயப்பேட்டை, சென்னை-14. (பக்.208).தற்காலச் சிறைச்சாலைகளில், அதிகாரிகளின் ஆசிகளுடன் தாதாக்கள் கோலோச்சி வருவதையும், "ராஜ மரியாதைகள்' யாவற்றையும் அனுபவித்து வருவதையும் நாளேடுகள் வாயிலாக நாம் நன்கு அறிவோம். மாறாக, கொடுங்கோல் ஆட்சியாளர்களால், விடுதலைப் போராளிகளும், தியாகச் செம்மல்களும் சிறைகளில் சித்ரவதைக்குட்படுத்தப்பட்டு வெந்து, சாம்பலானவர்களும், உயிர் நீத்தவர்களும் கணக்கில் அடங்கா. இந்தச் சிறியதோர் நூலில் 30 கட்டுரைகள் வாயிலாக, சரித்திரம் சுட்டிக்காட்டிடும், வீர தீரச் செயல்கள் புரிந்த மாவீரர்களை நாம் சந்திக்கும் வாய்ப்பை பெறுகிறோம். சுவைமிகு செய்திகளில் சில. இரட்டை ஆயுள் தண்டனையை ஏற்று வ.உ.சி.,யும், பத்தாண்டு காலம் கடுங்காவல் தண்டனை பெற்ற சக தேச பக்தர் சிவாவும், வெள்ளைக்கார நீதிபதியைப் பார்த்து அலட்சியமாகப் புன்முறுவல் பூத்தனராம் (பக்.16).நெஞ்சம் மறக்க இயலாத வீர - தீரர்களின் வரலாற்றுப் பெட்டகம் இந்நூல்.
-
மாடர்ன் தியேட்டர்ஸ் நிறுவனம் அதன் நிறுவனர் திரையுலகிற்கு செய்த சேவை மறக்க முடியாத ஒன்று.அறந்தை மணியன் ஒவ்வொரு தகவல்களாக திரட்டி சிறிய புத்தகத்தில் பெரிய சரித்திரத்தை குறையின்றி சொல்லியுள்ளார்.எவ்வளவு பேர் புழங்கிய அந்த இடம் இன்று குடியிருப்புகளாகி உள்ளதை படிக்கையில் மனம் வேதனைப்படுகிறது.
-
கவிதா பப்ளிகேஷன் , தபால் பெட்டி எண் : 6123 , 8 . மாசிலா மணி தெரு , பாண்டி பஜார் , தி.நகர் , சென்னை - 600 017.
-
கண்ணதாசன் பதிப்பகம் , 23 கண்ணதாசன் சாலை , தியாகராய நகர் , சென்னை -600 017.
-
கண்ணதாசன் பதிப்பகம், 23, கண்ணதாசன் சாலை, தி.நகர், சென்னை-600 017. தொலைப்பேசி : 24332682, 24338712.தமிழ்நாட்டில் எப்பேர்ப்பட்ட மிகச் சிறந்த மேதைகள் தோன்றியிருக்கிறார்கள் என்பதற்கு சீனிவாச ராமானுஜன் ஓர் உதாரணம்.
-
கண்ணதாசன் பதிப்பகம் , 23 கண்ணதாசன் சாலை , தியாகராய நகர் , சென்னை -600 017 .
-
கண்ணதாசன் பதிப்பகம் , 23 கண்ணதாசன் சாலை , தியாகராய நகர் , சென்னை -600 017.
-
நேதாஜி பிரசுரம், 56/92, அகிம்சாபுரம் 7வது தெரு, செல்லூர், மதுரை-2.பக். 224.பழைய வரலாறுகளைப் படிப்பதால், நிறைய விஷயங்களை அறிந்து கொள்வதோடு, ஒரு நாட்டின் வரலாற்றை புரட்டிப்போட்ட சம்பவங்களையும், அதனால் ஏற்பட்ட விளைவுகளையும் தெரிந்துகொள்ள முடிகிறது. அதுமட்டுமல்லாமல், வரலாற்று நாயகர்களைப் பற்றி விரிவாக அறிந்துகொள்ள முடிகிறது. அவர்கள் வாழ்க்கை பாதையில் சந்தித்த இன்னல்களும், அதை அவர்கள் சமாளித்த விதமும், நமக்கு நல்ல பாடமாக அமைந்து, நம் பாதையை செம்மைப்படுத்திக் கொள்ள உதவுகிறது.இந்நூலில், 26 தலைப்புகளில் பாபர், அக்பர், சத்ரபதி சிவாஜி, நூர்ஜஹான் முதல் நேரு, படேல், ராஜாஜி, காமராஜர் என பல தலைவர்களைப் பற்றி சுவாரஸ்யமான விஷயங்களை தொகுத்தளித்துள்ளார் நூலாசிரியர்.
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்