/ தமிழ்மொழி / இன்றைய சமூகத்தில் நாலடியாரின் பயன்பாடு

₹ 80

த.பெ.எண்.1429, 11, நானா தெரு, பாண்டிபஜார், தி.நகர், சென்னை-17. (பக்கம்: 112) பதினெண்கீழ்க்கணக்கு நூல்களான பதினெட்டு நூல்களில் ஒன்றான, நாலடியார், திருக்குறளுடன் சேர்த்து எண்ணப்படுவதாகும். புலவர் லட்சுமி, நாலடியார் பாடல்களை கசடறக் கற்று, ஆராய்ந்து இந்த நூலினை எழுதியுள்ளார்.பிறப்பிற்கும், இறப்பிற்கும் அஞ்சாமல் வாழ்பவனே முழு மனிதன். "பல்வேறு அடுக்கிச் சொல்வதாலேயே ஒரு நூல் இலக்கியம் ஆகாது "எத்தொழில் புரிவோரும் உண்மையாய் இருந்தால் ஏற்றம் பெறலாம் போன்ற கருத்துக்கள் பலவற்றை நூலில் ஆங்காங்கே கூறியுள்ளமை பாராட்டுக்குரியது.நாலடியார் நூலின் துணை கொண்டு ஒழுக்கத்தின் மேன்மை, கல்வியின் சிறப்பு, நட்பின் பெருமை, சினத்தின் சிறுமை முதலியவற்றை விளக்கியுள்ளார். ஒழுக்கத்தை, ஐவகைப்படுத்தி விளக்கம் கூறியுள்ளமை நன்று. மனிதனுக்கு உள்ள எட்டுவித பந்தங்கள் என்று வெறுப்பு, அச்சம், சீலம், துயரம் முதலியவற்றைக் கூறி, "இவற்றை குரு கடாட்சமின்றி யாரும் விட்டுவிட முடியாது என்று கூறியுள்ளார். சீலம் என்பது ஒழுக்கமல்லவா? இதை ஏன் விடவேண்டும்? இதை விடுவதற்கு குருவின் துணை தேவையா? வியப்பாக உள்ளது. வெண்பாக்களை, குறட்பாக்களை யாப்பு மாறாமல், பிழைகளின்றி எழுதுதல் நன்று. எழுத்துப்பிழை, ஒருமை பன்மை பிழை முதலியவற்றைத் தவிர்த்திருக்கலாம். பெண்பாற்புலவரின் முயற்சியை பாராட்டலாம். அழகான நூல்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை