/ பொது / இனிய இல்லறம்
இனிய இல்லறம்
இன்றைய திருமண நடைமுறைகள் குறித்த நுால். இளம் மணமக்களும், மண வாழ்வில் சங்கடங்களை பழகி கொண்டிருக்கும் பெரியோரும் படித்து தெளிவு பெற வேண்டிய கருத்துகள் உள்ளன. அன்றைய திருமண நடை முறையை முக்கூடற்பள்ளி படம் பிடித்துக் காட்டுகிறது. சமண விவாக விதிகள் விரிவாக உள்ளன. பவுத்த திருமண நடைமுறைகளும் விவரிக்கப்பட்டுள்ளன. கிறிஸ்துவ திருமண நடைமுறைகளும், தகுதி பத்திரம் வாசித்தலும் அறிந்து கொள்ள வேண்டியது. இஸ்லாம் மத கோட்பாடுகள் சொல்லும் விதியும் விவரிக்கப்பட்டுள்ளது. ஹிந்து திருமண விதிகள் பற்றியும் உள்ளது. ‘அன்பு தவிர்க்க முடியாதது’ என தாம்பத்தியத்துக்கு விளக்கம் சொல்லும் கட்டுரையை திரும்ப திரும்ப படிக்க வைக்கிறது. தமிழக திருமண முறைகளை அறிய உதவும் நுால். – சீத்தலைச்சாத்தன்