/ கவிதைகள் / இனியவை எழுபது
இனியவை எழுபது
மணிவாசகர் பதிப்பகம், 31, சிங்கர் தெரு, பாரிமுனை, சென்னை-108. தமிழுலகம் நன்கறிந்த கவிக்கோ ஞானச்செல்வனின் 70ம் ஆண்டு அகவையின் போது, அவரை பாராட்டி 70 கவிஞர்கள் உருவாக்கிய கவிதைகள் இந்நூலில் இடம் பெற்றிருக்கிறன. அதில் கவிப்பேரரசு வைரமுத்து, தன் கருத்தாக, "கோடு தாண்டாத இலக்கியமே இவரது குறிக்கோள் என்கிறார். கவியரங்கத்திற்கு மகுடமாக திகழும் ஞானச்செல்வனை, பிழையற தமிழை பயிற்றுவிக்கும் பெருமைக்கோ? பழையன மாறாத பண்பாட்டுக்கோ? என்கிறார் ஒரு கவிஞர். தமிழுக்காக வாழ்ந்த ம.பொ.சி.,யின் சீடர், இன்றும் தூய தமிழ் பரப்பும் கொள்கை கோவை பலரும் நெஞ்சார கவிதையில் புகழ்ந்திருப்பது மிகவும் வித்தியாசமானது. தூய தமிழ் வளர தொண்டாற்றும் இவர் பணி மேலும் சிறக்க வாழ்த்திய கவிதைகள் இந்நூலின் சிறப்பாகும்.