/ கட்டுரைகள் / இன்னொரு திணை மயக்கம்

₹ 140

நிகழ்கால அனுபவங்களின் வலியை வெளிப்படுத்தும் நுால். வாழ்வின் போதாமைகளை சுட்டிக்காட்டுகிறது. சமூக நிகழ்வை கூர்ந்து நோக்கி கருத்தியல் ரீதியாக விவாதத்தை முன் வைக்கிறது. மனித செயல்பாடு விளம்பரமாவதை, ‘அசையாமலிரு... அவர்கள் கொண்டாட ஏதுமிராது, உனக்கும் அவதியில்லை... ஆக வேண்டிய வேலைகளை கவனிக்கும் சமூகம்’ என சுருக்கமாக உரைக்கிறது.காரணமின்றி நடக்கும் விபத்துகள், நிர்வாக செயல்பாட்டால் ஏற்படும் பாதிப்புகளை கவித்துவமாக, ‘சூடான வறுகடலையின் தொலி உதிர்வது போல, மனிதர்களின் உயிர்கள் பறிபோகின்றன, அற்ப காரணங்களாலும்... காரணமே இல்லாமலும்...’ என வேதனையாக விவரிக்கிறது. சமூக நிகழ்வுகளை உற்று நோக்கிய சிந்தனைகளின் தொகுப்பு நுால்.– மதி


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை