/ கவிதைகள் / இன்புற்று சீலத்து இராமானுஜர்

₹ 70

உலகு உய்ய வந்து அவதரித்த மகான் ராமானுஜர். அவரது வரலாற்றை இனிய கவிதைகளாக வடித்துள்ளார் விப்ரநாராயணன்.ராமானுஜர், வைணவருக்கு மட்டுமின்றி, ஒட்டுமொத்த உலக சமுதாயத்திற்காகவே வாழ்ந்தவர். ‘வேரூன்றிய தீண்டாமையை வேரோடு அழித்த சமுதாயச் சிற்பியாவார். வேதாந்த ஞானி இவர்; வேதத்தின் சாரத்தை தந்தவர்; வேண்டுதல் வேண்டாமை இலாதவர்’ என்று ராமானுஜரைப் புகழ்கிறார்.ராமானுஜரின் வரலாறு, அவர் கற்ற முறை, அவரின் ஆச்சார்யர்கள் பற்றிய செய்திகள், ஸ்ரீபாஷ்யம் விளக்கவுரைக்கு அவர் பட்ட இன்னல்கள், அவரின் இறுதி நாட்கள் எனப் பல செய்திகளை இந்நூலில் காணலாம்.பக்தி இலக்கியப் பொக்கிஷம்!– எஸ்.குரு