/ கதைகள் / ஐந்தருவி ஐந்து கதைகள்

₹ 325

ஐந்து குறுநாவல் அடங்கிய தொகுப்பு நுால். ரயிலில் நடக்கும் சம்பவங்களையும், பயணியர் மனங்களையும் பகிர்கிறது, ‘தங்கச்சி மடம்’ நாவல். ராமேஸ்வரம் கடல், கடல் சார்ந்த மக்களின் வாழ்க்கைக்குள் அழைத்து செல்கிறது. ராமநாதபுரம் பாகனேரி, பட்டமங்கலம் என்ற கள்ளர் நாட்டு உறவு முறையை விவரிக்கிறது, ‘செம்மாதுளை’ என்ற நாவல். ஒரே மொழி, ஒரே சமூகமாக இருந்தும், எந்த உறவும் வைத்துக்கொள்ளாத சூழலை விவரிக்கிறது.சமூக விழிப்புணர்வு, அரசியல் எழுச்சி இரு பகுதி மக்களையும் எப்படி கைகோர்க்க வைத்தது என உணர்வுப்பூர்வமாக தருகிறது. ராணுவ வீரர்களின் வலியை, ‘கருணைக்கு அழிவில்லை’ நாவல் சொல்கிறது. நாட்டுப் பற்று குறையக்கூடாது என வலியுறுத்தும் நுால்.– டி.எஸ்.ராயன்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை