/ பயண கட்டுரை / ஐந்தருவி
ஐந்தருவி
ஒரே பள்ளியில் முனைவர் பட்டம் பெற்ற ஐந்து ஆசிரியர்கள் இணைந்து எழுதியுள்ள நுால். வரலாறு, வாழ்வியல், விழிப்புணர்வு என பகுதிகளாக பிரித்து தொகுக்கப்பட்டுள்ளது.வீறு கவியரசர் முடியரசனார் என்ற பெயர் காரணம் சுவையாக விளக்கப்பட்டுள்ளது. இயற்பெயரும் குறிப்பிடப்பட்டுள்ளது. வீறு கவியரசர் சந்தித்த சவால்கள், சங்கடங்கள் விவரிக்கப்பட்டுள்ளன. வரவேண்டிய விருதுகளும் பெருமைகளும் எப்படியெல்லாம் தடுக்கப்பட்டன என்ற தகவல்களும் உள்ளன.ஆசிவகம் இந்தியாவின் வடகிழக்கில் தோன்றினாலும், தமிழகத்தில் வளர்ச்சி கண்டிருப்பதாக குறிப்பிடுகிறது. எச்சங்களை வைணவ பண்பாட்டு பழக்க வழக்கங்களில் உள்ளதாக எடுத்தியம்புகிறது. கட்டுரைகளின் தொகுப்பு நுால். – டாக்டர் கார்முகிலோன்